Home Jaffna News யாழ் நாவற்குழியில் 23 வயதான குடும்ப பெண் அடித்துக் கொலை! கணவன் மடக்கி பிடிப்பு

யாழ் நாவற்குழியில் 23 வயதான குடும்ப பெண் அடித்துக் கொலை! கணவன் மடக்கி பிடிப்பு

33

யாழ்ப்பாணம், நாவற்குழியில் இளம் பெண் ஒருவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஒக்ரோபர் 16) காலை நடந்துள்ள நிலையில், சந்தேகநபரான கணவன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான அஜந்தன் – யமுனா என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை கைகளாலும், கருக்கு மட்டையாலும் தாக்கிக் கொன்றுள்ளார் என்று தெரியவருகின்றது.

கணவர் 25 வயதுடையவர் என்றும், இவர் முன்னர் ஜெயில் தண்டனை அனுபவித்தவர் என்றும் பொலிஸார் கூறுகின்றார்.

குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை நோக்கி தீவிர தேடுதலை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில்
“தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது” என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவிக்கு தகாத தொடர்பிருந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது என தெரியவருகின்றது.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleவடமேல் மாகாண மலையகத் தமிழர்கள் நிரந்தர காணியுரிமை கோரி போராட்டம்
Next articleமுருங்கை காய் பறித்தவரிற்கு நேர்ந்த பரிதாபம்