யாழ் வரும் அனுரகுமாரவின் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி! – At present Jaffna Information

2
யாழ் வரும் அனுரகுமாரவின் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி! - At present Jaffna Information - Tamil Breaking News 24x7

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி செல்லவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அதிபர் வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,{Anura kumara dissanayaka) அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் நடத்த மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மாநாடு தனியார் விடுதியில் இடம்பெறவுள்ளது.

தெளிவான நிதிக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில்

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அதிபர் வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

இலங்கையில் ஒரு தெளிவான நிதிக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் பங்கேற்குமாறு நிதி விவகாரங்களை கையாளும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில்

இந்த நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளாக கூறப்பட்ட போதிலும் எந்தவொரு சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்படவில்லையென தேசிய மக்கள் சக்தி ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு கூறியுள்ளது.   

Earlier articleஇன்றைய ராசிபலன்கள் 03.04.2024
Subsequent articleகிளிநொச்சியில் பயங்கரம் குழந்தைகளின் உணவில் கலக்கப்பட்ட விஷம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here