யுவன் ‘நோ’ சொன்னா நாங்க அவர் கிட்ட போவோம்! ஆர்.கே.சுரேஷ் அதிரடி பேச்சு!

1
யுவன் ‘நோ’ சொன்னா நாங்க அவர் கிட்ட போவோம்! ஆர்.கே.சுரேஷ் அதிரடி பேச்சு! - Dinamani news

Yuvan பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தொடர்ச்சியாக தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவருக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷிற்கும் இடையே பிரச்சனை ஒன்று நடந்தது. அது என்னவென்றால், ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென்மாவட்டம் என்ற திரைப்படத்தில் இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்திற்கு தென்மாவட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் ஆர்கே சுரேஷ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார்.

READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

அதனை தொடர்ந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த யுவன் சங்கர் ராஜா அதிர்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் ” பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு தெளிவு. “தென் மாவட்டம்” படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்று என்னை யாரிடமும் கமிட் ஆகவோ, அணுகவோ இல்லை” என்று கூறினார்.

இதனை பார்த்த ஆர்கே சுரேஷ் உடனடியாக யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் அளிக்கும் விதமாக “வணக்கம் யுவன் சார் நீங்கள் திரைப்படம் மற்றும் லைவ் இன் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். ஒப்பந்தத்தை தயவுசெய்து சரிபார்க்கவும் நன்றி” என்று கூறியிருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்கே சுரேஷ் இந்த சர்ச்சை குறித்து பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” யுவன் என்னுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், அது ஏன் தென்மாவட்டம் படமாக இருக்க கூடாது? யுவன் அதை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால், நாங்கள் இமானுடன் செல்வோம்.

learn more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

யுவன் பின்னடைவில் இருந்தபோது தர்மதுரையைக் கொடுத்தேன். மாமனிதன் ரிலீஸுக்கு நானும் உதவி செய்தேன்.இப்போது நாங்கள் இதை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொண்டோம், அவருடைய குழு எங்களுக்கு பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளது. யுவன் எங்களுக்கு சாதகமான பதிலை அளிப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

The publish யுவன் ‘நோ’ சொன்னா நாங்க அவர் கிட்ட போவோம்! ஆர்.கே.சுரேஷ் அதிரடி பேச்சு! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here