ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் !

2
ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! - Dinamani news
ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! - Dinamani news

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ‘ஏழைகள் வாழ நீ செய்த யாகம்’ வரிகளை போல அவர் செய்த் உதவிகள் என்றுமே மறையாது என்றே கூறலாம். சாப்பாடு வயிறு நிறைய போட்டு உதவி செய்ததிலிருந்து பணம் உதவி கொடுத்தது வரை பல உதவிகளை அவர் செய்து இருக்கிறார்.

அவர் செய்த உதவிகளை அவருடன் படங்களில் நடித்தும் கூடவே பயணித்த பலரும் பேட்டிகளில் கலந்துகொள்ளும் போது கூறும்போது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப்போல, படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்த் கோபப்பட்ட சம்பவங்களையும் பிரபலங்கள் கூறி பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய செந்தில் நாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பில் விஜயகாந்த் நடிகை ராதிகா கன்னத்தில் அறைந்த தகவலை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய செந்தில் நாதன் ” பூந்தோட்ட காவல்காரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கடைசியாக இறுதி காட்சி எடுக்கவேண்டி இருந்தது. அந்த காட்சி என்னவென்றால், விஜயகாந்த் ராதிகாவின் கன்னத்தில் அறையவேண்டும். அந்த காட்சி எடுக்கும்போது விஜயகாந்த் அறைவார் அதற்குள் ராதிகா நகர்ந்து போய் விழவேண்டும்.

ஆனால், விஜயகாந்த் அறைய வரும் போது ராதிகா நகராமல் இருந்தால் உடனடியாக அவருடைய காதோரம் கன்னத்தில் பளார் என அறை விழுந்தது. அதில் ராதிகா சுருண்டு விழுந்துவிட்டார். பிறகு விஜயகாந்த் பதறிப்போய் மன்னிப்பும் கேட்டார். இருந்தாலும் அவர் அறைந்த அறையில் ராதிகாவுக்கு தலையே சுத்திருக்கும்” எனவும் செந்தில்நாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பால முருகன்

நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! - Dinamani newsராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here