ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..!

37
ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம்
ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20ம் ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் சா.சஜிந் ஆகியோரின் தலைமையிலும், சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தி.சில்வயன், செயலாளர் டி.டினுசிக்கா ஆகியோரின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் இரத்ததான முகாமில் சனசமூக நிலைய ஆலோசகரும், முன்னாள் மாநகரசபை உறுப்பிருமான அ.கிருரஜன், புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்குத் தந்தை அருட்தந்தை நிக்சன் அடிகளார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன், இரத்த வங்கி பொதுச் சகாதாரப் பரிசோதகர் பைசால் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர்,

புளியந்தீவு தெற்கு கிராமசேவை உத்தியோகத்தர் சதீஸ்வரன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் தயாசீலன், சனசமூக நிலையத்தின் உபதலைவர் சிவஞானம், திரௌபதை அம்மன் ஆலய செயலாளர் சனத்குமார், ஆனைப்பந்தி ஆலய நிருவாகத்தினர்,

புளியந்தீவு ஜோசப் வாஸ் மன்றத்தின் அங்கத்தவர்கள், புளியந்தீவு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர், ஹால்டன் விளையாட்டுக் கழகத்தினர், ரிதம் இளைஞர் கழகத்தினர், ரிதம் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், இரத்தக் கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதேசத்தின் பலரும் இரத்ததானம் வழங்கியதுடன், பல இளைஞர்கள் புதிய இரத்தக் கொடையாளர்கள் அறிமுகமாகியுமிருந்தனர்.

ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் என்பன இவ் இரத்ததான முகாமிற்கான பூரண அனுசரணையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம் ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..! - Dinamani news - ரிதம் சனசமூக நிலையம், ரிதம் இளைஞர் கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here