ரெஸ்டாரெண்ட் பங்ஷனில் யார் ஜெயிக்க போறாங்க? கோபியா? பாக்கியாவா?

1
ரெஸ்டாரெண்ட் பங்ஷனில் யார் ஜெயிக்க போறாங்க? கோபியா? பாக்கியாவா? - Dinamani news

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி ரெஸ்டாரெண்டில் எல்லாரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டு இருக்கின்றனர். அமிர்தா கோலம் போட்டு கொண்டு இருக்கிறார். செழியன் வெளியில் அலங்காரம் செய்துக் கொண்டு இருக்கிறார்.

கிச்சன் வேலைகளை செல்வி பார்த்து கொண்டு இருக்கிறார். எல்லாரும் நிம்மதியா இருக்க செழியன் மட்டும் கவலையுடனே இருப்பது போல பாக்கியாவுக்கு தோன்றுகிறது. இனியா அங்கு வர பாக்கியாவுடன் கதை பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அச்சச்சோ!.. ஜிப்பு போட மறந்த தனுஷ் ஹீரோயின்!.. வெளியே தெரிந்த உள்ளாடை!.. ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..

ஜெனி ரெஸ்டாரெண்ட் பங்ஷனுக்கு கிளம்பி கொண்டு இருக்க அங்கு வரும் ஜோசப் நீ போக கூடாது என கதவை சாத்திவிடுகிறார். ஆனால் ஜெனி எனக்கும் செழியனுக்கும் பிரச்னை இருக்கு. ஆனால் என்னால் ஆண்ட்டி பங்ஷனுக்கு போகாம இருக்க முடியாதுப்பா எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

மரியம் எனக்கு ஜெனி, செழியனை டைவர்ஸ் செய்வா எனத் தோன்றவில்லை என்கிறார். அது எப்படி செய்யாம இருப்பா. நான் உடனே வக்கீலிடம் பேசி அந்த டைவர்ஸை வாங்கி அவளுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சி வச்சிடுறேன் என கோபமாக ஜோசப் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். ரெஸ்டாரெண்டில் அமிர்தாவும் எழிலும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர்.

கோபியை மீட் செய்ய வருகிறார் செந்தில். என்ன மினிஸ்டர் வந்துருவாங்களா எனக் கேட்க கண்டிப்பா வருவாங்க என்கிறார். உடனே மினிஸ்டர் பிஏவுக்கு கால் செய்து கேட்க அவரும் வருவாங்க எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் மினிஸ்டர் வந்து என்ன ப்ரோகிராம் எனக் கேட்க ஸ்கூல் பங்ஷன் என்கிறார். வேற எதோ இருந்துச்சே என மினிஸ்டர் கேட்க பாக்கியா ப்ரோகிராமை மறைத்து விடுகிறார். இதை போனில் கேட்டுக்கொண்டு இருக்கும் கோபி சந்தோஷமாகி விடுகிறார்.

இதையும் படிங்க: வேறலெவல் மிரட்டலா இருக்கே.. சச்சின் பந்து போட சூர்யா பேட் ஆடுறாரே!.. இது எப்போ நடந்துச்சு!..

செந்திலை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு பாக்கியா ஏமாறுவதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறார். அந்த நேரத்தில் ரெஸ்டாரெண்டுக்கு ஜெனி வந்து இறங்குகிறார். அவரை பார்த்து செழியன் தயங்கி நிற்க அனைவரும் சந்தோஷமாக ஜெனியை வரவேற்கின்றனர். பின்னர் குழந்தையை வாங்கி கொஞ்சிக்கொண்டு இருக்க தன் பிள்ளையை செழியன் ஏக்கமாக பார்த்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here