வாய்ப்பு கிடைக்காமல் ஹோட்டலில் வேலை செய்த சமுத்திரக்கனி!.. அங்க நடந்ததுதான் ஹைலைட்!..

6
வாய்ப்பு

தமிழ் சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்குபவர்தான் சமுத்திரக்கனி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தார். அதன்பின் சில சீரியல்களை இயக்கினார். உன்னை சரணமடைந்தேன் என்கிற படம் மூலம் வாய்ப்பு வழங்கக்கப்பட்டு  சினிமாவில் இயக்குனராக மாறினார். அடுத்த படமே விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு என்கிற படத்தை எடுத்தார்.

அதன்பின் அவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் அவரை எப்படிப்பட்ட இயக்குனர் என எல்லோருக்கும் காட்டியது. இந்த படத்தில் அவரின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சசிக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோத சித்தம் ஆகிய படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன வாய்ப்பு !…

ஒருபக்கம் பல திரைப்படங்களில் சமுத்திரக்கனி நடித்தும் இருக்கிறார். மக்களுக்கு அறிவுரை சொல்வது போன்ற வேஷம் என்றாலே இயக்குனர்கள் அழைப்பது சமுத்திரக்கனியைத்தான். சாட்டை என்கிற படத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என காட்டியிருந்தார்.

இப்போது தமிழ், தெலுங்கு என ஒரு வாய்ப்பு அதிகரித்து பிஸியான நடிகராக சமுத்திரக்கனி மாறிவிட்டார். தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார். ஆனால், சமுத்திரக்கனியின் துவக்க காலம் மிகவும் போராட்டமாகவே இருந்து.

இதையும் படிங்க: அஜித்துக்கு எங்கடா அறுவை சிகிச்சை நடந்துச்சு? இதுக்கு நீங்க பிச்ச எடுக்கலாம்.. பொளந்து கட்டிய பிரபலம்

சினிமா மீது உள்ள ஆசையில் வீட்டிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார். தங்க இடமில்லை. சாப்பிடக்கூட கையில் பணம் இல்லை ஒரு கட்டத்தில் கையில் இருந்த பத்து ரூபாயை வைத்துக்கொண்டு பஸ் ஏறிவிட்டார். அப்போது விழுப்புரத்திற்கு ரூ.9.80 டிக்கெட். விழுப்புரத்தில் இறங்கி ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர நினைத்து ஓட்டல் முதலாளியிடம் சென்று வேலை கேட்டிருக்கிறார்.

அவரின் கதையை கேட்ட ஓட்டல் முதலாளி ‘நான் காசு தரேன். ஊருக்கு போறியா?’ என கேட்டிருக்கிறார். அதை வாங்க மறுத்த சமுத்திரக்கனி ‘இல்ல சார்.. எனக்கு வேலை கொடுங்க.. சம்பளமா வாங்கிட்டு போறேன்’ என சொன்னாராம். அப்போதே தன்மானத்துடன் இருந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here