விருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

21
விருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

விருச்சிக ராசி நேயர்களே, இந்த புத்தாண்டு 2023-ம் ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். ஏனெனில் மன தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவராக இருப்பீர்கள். 3ம் வீட்டில் சனி பகவான் இருப்பதும் 5ம் வீட்டில் குரு இருப்பதும் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் உங்களுக்கு சிறப்பான நிதி பலன்களைத் தரும்.

உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். எனவே, ஆண்டின் முதல் பாதி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஜனவரி 17-ம் தேதி சனி 4ம் வீட்டிற்கு வந்த பிறகு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ஏப்ரல் 22 அன்று, குரு பகவான் 6ம் வீட்டில் ராகு மற்றும் சூரியனுடன் இணைகிறார். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். அக்டோபர் 30க்குப் பிறகு ராசி மாறி ஐந்தாம் வீட்டிற்கு ராகு மாறுவதும் மற்றும் குரு ஆறாம் வீட்டில் நீடிப்பதும் உங்களுக்கு ஓரளவு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் வெளியூர் பயண வாய்ப்புகளும் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

இந்த 2023ம் ஆண்டில் உங்கள் கஷ்டங்கள் முற்றிலும் நீங்கி விட்டது. இந்த புத்தாண்டு முதல் உங்களுக்கு வந்த தடைகள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க தொடங்கவும். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக எடுத்து செய்வீர்கள். அடுத்தவர்களை எளிதில் கவரும் பேச்சு திறமை உங்களிடம் இருக்கும்.

தற்சமயம் வாக்குச்சனி நடப்பதால் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் அதிக பொருள் விரையம் ஏற்படும்.

வண்டி, வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை. நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளர்வர்களின் தொடர்பு கிட்டும்.

ஆன்மீக ஆர்வம் கூடும். பல புண்ணிய ஸ்தங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். பயணங்கள் ஓரளவு நன்மையை தரும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். திருமண முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக திருப்பணி போன்ற சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு விஷத்தை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது உத்தமம்.

உத்யோகத்தில் தினசரி பணிகளை விரைவாக முடிக்கவும். உத்யோகத்தில் வேலை பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.