வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்பு! – As we speak Jaffna Information

3
வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்பு! - As we speak Jaffna Information - Tamil Breaking News 24x7

ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்நூறு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.

விசேட பயிற்சி நெறிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மனிதவளம் மற்றும் பாதுகாப்புத் துறை அதன் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறது. அதற்கான செலவை ஜனாதிபதி நிதியம் ஏற்கிறது.

இந்தப் பயிற்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்டது.

இலங்கை ஹோட்டல் பயிற்சிக் கல்லூரியின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள், குறிப்பாக ஹோட்டல்துறையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இளைஞர்கள் நேரடியாக வேலைகளுக்கு வழிவகுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here