வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு!

1
வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு! - Dinamani news
வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு! - Dinamani news

Nayanthara நடிகை நயன்தாரா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ‘நான் தொலைந்துவிட்டேன்’ (i’m misplaced)  என்று பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு எதோ பிரச்சனை என்றும் ஒரு சிலர் எதாவது படத்தின் பெயராக இருக்கும் அதனால் அவர் ப்ரோமோஷனுக்காக அப்படி போட்டு இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எல்லாமே தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது. எனவே, அதனால் கூட அவர் அப்படி பதிவு போட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சும்மாவே நயன்தாராவை பற்றிய வதந்தி தகவல்கள் ஒரு பக்கம் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து விட்டதாகவு சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக நயன்தாரா தனது கணவருடன் எமோஷனலாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியீட்டு முற்று புள்ளி வைத்து இருந்தார். நயன்தாராவுக்கு அன்பளிப்பாக தனது காதலை வெளிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் புல்லாங்குழலில் மறுவார்த்தை பேசாதே பாடலை வாசிக்க வைத்து நயன்தாராவை எமோஷனலாக்கி இருந்தார்.

இதனை கேட்டவுடன் எமோஷனலான நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு அன்பாக முத்தம் கொடுத்தார். இது ஒரு புறம் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தாலும் கூட மற்றோரு பக்கம் ட்ரோலாக மாறியது என்றே கூறலாம். இப்படியான சூழலில் நயன்தாரா ‘நான் தொலைந்துவிட்டேன்’ (i’m misplaced)  என்று பதிவிட்டுள்ளது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

பால முருகன்

நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு! - Dinamani newsவேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு! - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here