2023ஆம் ஆண்டு ராசி பலன்.. இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள்.. அதிர்ஷ்ட மழை ஆரம்பம்

31
2023ஆம் ஆண்டு ராசி பலன் – 2023 புது வருடம் இன்னும் இரு மாதங்களில் பிறக்கப்போகிறது. மகிழ்ச்சியும் மன நிம்மதியான வாழ்க்கையைத்தான் இன்றைக்கு பலரும் விரும்புகின்றனர்.

பொருளாதார வளம் இருந்தாலே பலருடைய மனதிலும் நிம்மதி குடியேறும் முகத்தில் மகிழ்ச்சி பூ பூக்கும்.

இந்த புத்தாண்டு யாருக்கெல்லாம் நல்ல வேலை வாய்ப்பை தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் யாருக்கெல்லாம் லாபம் அள்ளித்தரப்போகிறது. அதனால் யாரெல்லாம் நிம்மதியை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகின்றன என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது. முக்கிய நான்கு கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது.

2023ஆம் ஆண்டு ராசி பலன்

சனி பெயர்ச்சி ஜனவரி மாதம் நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நிகழப்போகிறது.

இந்த கிரகப்பெயர்ச்சி நிறைய பேருக்கு நன்மை செய்யப்போகிறது. 2020ஆம் ஆண்டு முதலே பலருக்கும் உடல் நலக்குறைவு, மருத்துவ செலவுகள் ஏற்பட்டது. பலரும் கடன் பட்டு செலவு செய்திருப்பார்கள்.

குடும்பத்தில் பொருளாதார கஷ்டம் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். எப்போது நமக்கு விடிவுகாலம் வரும் என்று ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நவ கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும். யாரெல்லாம் பண மழையில் நனைவீர்கள் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் புது வேலை கிடைக்கும்? குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

2023ஆம் ஆண்டு ராசி பலன்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. காதல் வாழ்க்கையில் கவிதை பாடுவீர்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி நெருக்கமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

புதுமண தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் ஆசைகள் நிறைவேறும். இடமாற்றம் உண்டு. அந்த இட மாற்றத்தினால் வெற்றி கிடைக்கும்.

வேலையில் புரமோசன் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும் உங்கள் குடும்ப வாழ்க்கை குதூகலம் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும்.

வெளிநாடு யோகம் கை கூடி வரும். பிடித்த இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வெற்றிகள் குவியப்போகிறது. வேலை கிடைக்கும் பொருளாதார ஏற்றம் கிடைக்கும்.

மூத்த சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். 2023ஆம் ஆண்டில் பலவிதமான நன்மைகள் நடைபெறும்.

முன்னோர்கள் அருள், குல தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.

ரிஷபம்

2023ஆம் ஆண்டு ராசி பலன்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு குருவும், சனிபகவானும் நிறைய சாதகங்களை செய்யப்போகிறார்கள்.

குடும்ப விசயத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். காதல் வானில் சிறகடித்துப்பறக்கப்போகிறீர்கள். காதல் வெற்றிகரமாக கல்யாணத்தில் முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

வேலையில் புரமோசன் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு நல்ல இடத்தில் நிரந்தரமான வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைக்கு முடிவுக்கு வரும். இல்லத்தரசிகளுக்கு உடல்நிலை பாதிப்பு சரியாகும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போவது யோகத்தை தரப்போகிறது.

மிதுனம்

2023ஆம் ஆண்டு ராசி பலன்

மிதுன ராசிக்காரர்களே.. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே உங்கள் வாழ்க்கையில் கிரகங்கள் புகுந்து விளையாடியுள்ளன. கண்டச்சனி, அஷ்டமத்து சனி என அடிமேல் அடி பட்டிருப்பீர்கள். இனி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

கடன் பட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனி நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. ஒன்பதாம் வீட்டிற்கு சனிபகவான் வரப்போகிறார்.

வலி வேதனைகள் நீங்கப்போகிறது. முன்ஜென்மத்தில் செய்த புண்ணியங்களுக்கு பலன் கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

திருமணம் சுப காரியம் நல்ல வரன் கிடக்கும். லாப ஸ்தானத்தில் குரு பயணம் வெற்றியைத் தரும் பதவி உயர்வு கிடைக்கும். 2023ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. வேலையின்றி தவித்த உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

நமக்கு விடிவுகாலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு அடுத்து நிகழக்கூடிய சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஒருவித நிம்மதியை தரப்போகிறது.

படாத பாடு பட்டு பரிதவித்து கிடந்த உங்களுக்கு பண வருமானமும் அதிகரிக்கும். உடல் நல பாதிப்புகளும் நீங்கும். நல்ல வேலையும் நிரந்தர வருமானமும் கிடைக்கக் கூடிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

கடகம்

2023ஆம் ஆண்டு ராசி பலன்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் மே மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

குரு பார்த்தால் கோடி நன்மை என்பதால் வேறு எந்த வித தோஷங்களும் பாதிக்க வாய்ப்பு இல்லை. அஷ்டமத்து சனி என்றாலும் கஷ்டங்களை தர மாட்டார் மாறாக எட்டாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார் சனிபகவான்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையில் புரமோசன் கிடைத்தாலும் கூடவே மன அழுத்தமும் ஏற்படலாம்.

யாரை நம்பியும் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குருவின் இடமாற்றம் புதிய பதவியையும் பொறுப்புகளையும் தேடித்தரும்

எனவே எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். உங்களுடைய பயணத்தில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைப்பது அவசியம்.

2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன் 2023ஆம் ஆண்டு ராசி பலன்