3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!

1
3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை! - Dinamani news

Santhosh Narayanan  என்ஜாய் எஞ்சாமி வந்த சமயத்தில் உலகம் முழுவதும் பல மக்களால் ரசிக்கப்பட்டது என்றே கூறலாம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த பாடலை தெருக்குறள் அறிவு எழுதி பாடகி தீ உடன் இணைந்து பாடி இருந்தார். அதனை போல ஆல்பம் பாடலிலும் இருவரும் பாடி கொண்டு ஆடிய காட்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

learn more- ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்?

இந்த பாடல் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய சந்தோஷ் நாராயணன் ” என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

learn more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

அந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து தற்போது வரை கோடிக்கணக்கான பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. ஆனால், இந்த பாடலில் இசையமைத்த எனக்கு மூன்று வருடங்கள் ஆகியும் ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை. அந்த நிறுவனத்தை பல முறை தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்தோம்.

இந்த அனுபவத்தால் நான் என்னுடைய சொந்த ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.  தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தோம்.

learn more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

இந்த விவகாரம் குறித்து இதுதான் என்னுடைய முதல் பதிவு. இந்தியக் கலைஞர்களே வருத்தப்படாதீர்கள், உங்கள் நிலுவைத் தொகை சரி செய்யப்படும். இந்தியக் கலைஞர்கள் அவர்களது திறமையைக் காட்ட, வருமானத்தைப் பெற வெளிப்படையான மென்மையான தளத்தைப் பெற வேண்டுமென விரும்புகிறேன்” எனவும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

The submit 3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here