Amaran அமரன் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா

2
Amaran அமரன் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா - Dinamani news
Amaran அமரன் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா - Dinamani news

Amaran சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜ்குமார் பெரிய சாமி இயக்கி வருகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தில் லல்லு பிரசாத், சுரேஷ் சக்ரவர்த்தி, மிர் சல்மான்உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி  இருந்தது.

படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக மாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எனவே படத்தின் டீசரும் பார்ப்பதற்கு நன்றாக இருந்த காரணத்தினால் கோலிவுட் திரையுலகில் இந்த திரைப்படத்தின் மீது இருக்கலாம் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை   தற்போது விற்பனையாகியுள்ளது. அதன்படி அமரன் திரைப்படத்தின் ஓடிடி  உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கிட்டத்தட்ட 60 கோடிக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் இந்த அளவிற்கு ஒரு திரைப்படம் விற்பனையானதே இல்லை இதுவே முதன்முறை. இந்த விலைக்கு இந்த படம் விற்பனை ஆகி உள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமாகியுள்ளது.

பால முருகன்

நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Amaran அமரன் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா - Dinamani newsAmaran அமரன் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here