BJD-BJP 15 வருடங்கள் கழித்து மீண்டும் பாஜக

3
BJD-BJP 15 வருடங்கள் கழித்து மீண்டும் பாஜக - Dinamani news
BJD-BJP 15 வருடங்கள் கழித்து மீண்டும் பாஜக - Dinamani news

BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்.

பின்னர் 2009ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பின்வாங்கியது நவீன் பட்நாயக்கின் BJD. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போல கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இரு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . .

மக்களவை தேர்தலோடு, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் வரவுள்ள நிலையில்,  நேற்று நவீன் பட்நாயக்கின் வீட்டில் BJD மூத்த தலைவர்கள் வரும் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

நவீன் பட்நாயக்குடன் BJD துணைத் தலைவரும், மாநில எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் பாஜகவுடன் கூட்டணி என்று உறுதியாக குறிப்பிடவில்லை.

 

மணிகண்டன்

நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

BJD-BJP 15 வருடங்கள் கழித்து மீண்டும் பாஜக - Dinamani newsBJD-BJP 15 வருடங்கள் கழித்து மீண்டும் பாஜக - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here