உலக செய்திகள்

Homeஉலக செய்திகள்

HIV நிரந்தரமாக அகற்ற மரபணு தொழில்நுட்பம்!

பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றுவதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக நோபல் பரிசு பெற்ற Crispr எனும் மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுட்பம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் டிஎன்ஏவை சிறிய துண்டுகளாக உடைத்து அவற்றை நீக்குகிறது அல்லது செயலிழக்கச் செய்கிறது. அதன் மூலம் ஒருவரது உடலில் உள்ள வைரஸ்களை முற்றிலுமாக அகற்றி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து மேலும் சோதனைகள் செய்யப்பட வேண்டும் […]

இன்று மார்ச் 15 – உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.

ஊனம் என்பது உடலில் ஏற்படும் குறை அல்ல. மனதின் வலு வீழ்ச்சியே உண்மையான ஊனம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் உண்டு. மாற்று திறன் கொண்டு சாதனை படைக்கும் சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் சாதித்துள்ளார்கள். எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவரையில் எதுவும் இழப்பல்ல. ஆனால் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழந்தால் எல்லாம் பேரிழப்பே! நம்பிக்கையோடு வாழ்வை காதலிப்போம்!

கனடாவில் பயங்கரம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

பாம்பும் கீரியுமா ஏன் பரம எதிரி-வெளியான காரணம்..!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால், உலகின் நச்சு மிகுந்த ராஜநாக பாம்பு கூட கீரிகளை கண்டால் அஞ்சுகின்றன. இருவருக்குள்ளும் ஏன் இந்த பகை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஃபாரஸ்ட் வைல்ட் லைஃப் என்ற இணையதள அறிக்கையின்படி, கீரி மற்றும் பாம்பு இரண்டையும் எதிரியாகவே இயற்கை உருவாக்கியுள்ளது. இது இரு உயிரினங்களின் இயற்கையான உள்ளுணர்வு. பல வகையான பாம்புகள் கீரி குட்டிகளை தங்கள் இரையாக்கிவிடுகின்றது. அந்த நேரத்தில் கீரிகள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க […]

படகு விபத்து-7 வயது சிறுமி பலி..!

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் நோர்ட் திணைக்களம் தெரிவித்துள்ளது.   படகில் அதிகளவான நபர்கள் பயணம் மேற்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   விபத்தின் போது படகில் 10 சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் […]

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை..!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.   சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தூதரகம் கூறியது. “மிசோரியில் செயின்ட் லூயிசில் உயிரிழந்த அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் […]