கனடா செய்திகள்

Homeகனடா செய்திகள்

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – வெளியான புதிய தகவல்!

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க […]

6 பேர் படுகொலை – சந்தேகநபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14) நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் நேற்று (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் பயங்கரம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}

சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது.   பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.   இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது.   இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது.   சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது.   இந்த […]

கனடா மாப்பிளையை எதிர் பார்க்கும் தமிழ் பெண்களுக்கு ஆப்பு-கடுமையாகும் விசா நடமுறை..!

கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்க உள்ளதாக அறிவித்துள்ளன. கனடாவின் ஐஆர்சிசி அமைச்சர் மில்லர் கருத்துத் தெரிவிக்கையில், ​​“கனடாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடு, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் தீய சக்திகளின் வலையில் சிக்காமல் இருக்கவும் கனடாவின் மக்கள்தொகை நிலையானதாக வளரவும் வேண்டும் என்பதே எங்கள் முயற்சி என குறிப்பிட்டுள்ளார். முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச […]

கனடாவில் யாழை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு-இறுதி யாத்திரை வியாழன்..!

கனடாவில் நெல்லியடியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் . நெல்லியடி வதிரி மாலை சந்தை வீதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் கணேஷகுமார் (பொறியியலாளர்) வயது 44 என்ற இளம் குடும்பஸ்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இளைய சதோதரனும் விபரீத முடிவால் உயிரிழந்தார். இவரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை கனடாவில் இடம்பறவுள்ளது. […]

கனடா மோகம்-அழிந்து போகும் சமூகம்-இத்தனை கோடி மோசடியா-சற்று முன் வெளியான தகவல்..!

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந் துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை – கனடாவுக்கு அனுப்புவ தாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சி யாக இடம்பெற்று வருகின்றன என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் […]

கனடா மோகம்-வாழ்வை தொலைக்கும் யாழ்ப்பாணிஸ்-தூதரகம் அதிரடி முடிவு..?

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச் சந்தித்து அதுகுறித்துக் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெருந்தொகைப் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பண மோசடிகள் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]