முக்கிய செய்திகள்

Homeமுக்கிய செய்திகள்

Ban on post-election polls

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]

அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி

கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிகள் மற்றும் […]