DMK – MDMK – திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு

2
MK Stalin - Vaiko
MK Stalin - Vaiko

DMK – MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன.

இன்று காலை திமுக – மதிமுக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மதிமுக சார்பில் இரு மக்களவை தொகுதி கேட்கபட்ட நிலையில் தற்போது ஏற்கனவே வெளியான தகவலின்படி,  ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவை ஒதுக்க இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

இதனை அடுத்து, மதிமுக சார்பில் அதன் தற்போதைய தலைமை பொறுப்பாளர் துரை  வைகோ போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிமுக நிறுவனர் வைகோ ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதால், மீண்டும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, மதிமுக சார்பில் போட்டியிட விருதுநகர் அல்லது திருச்சி மக்களவை தொகுதி கேட்கலாம் என மதிமுக முடிவு செய்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தொகுதி, வேட்பாளர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் மதிமுக அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்டுகிறது.

 

மணிகண்டன்

நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

DMK - MDMK - திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு - Tamil Breaking News 24x7DMK - MDMK - திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு - Tamil Breaking News 24x7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here