Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்

Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ திரை விமர்சனம்

ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த Leo இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. லோகேஷ், விஜய் கூட்டணியில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது தற்போது பூர்த்தி ஆனதா என்பதை லியோ திரை விமர்சனம் வாயிலாக இங்கு காண்போம்.

விஜய் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் காஷ்மீரில் வாழ்ந்து வருகிறார். காபி ஷாப் ஓனராகவும், விலங்கு நல ஆர்வலராகவும் இருக்கும் இவர் ஒரு ரவுடி கும்பலுடன் மோத போய் மீடியாவில் பிரபலமாகிறார். அவருடைய முகத்தை பார்க்கும் ஆன்டனி தாஸ் அவருடைய தம்பி ஹரால்டு தாஸ் இருவரும் அவரை Leo தாஸ் என நினைத்து நெருங்க முயற்சி செய்கின்றனர்.

Leo Movie Review - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம் - Dinamani news - Leo Movie Review, லியோ, லியோ திரை விமர்சனம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ
Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? திரை விமர்சனம்

ஆனால் நான் பார்த்திபன் என்று விலகி ஓடும் விஜய் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிறார். அதைத்தொடர்ந்து தாஸ் சகோதரர்களின் நோக்கம் என்ன, உண்மையில் பார்த்திபன் தான் Leo தாஸா, இவர்களுக்குள் அப்படி என்ன உறவு என்பதை தன்னுடைய பாணியில் லோகேஷ் ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார்.

மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் ஒவ்வொரு காட்சிகயிலும் வெறித்தனமாக நடித்து ஒன் மேன் ஷோ என சொல்ல வைத்திருக்கிறார். அதிலும் முதல் 10 நிமிட காட்சி வேற லெவல். பார்த்திபன், லியோதாஸ் என வெரைட்டி காட்டி இருக்கும் அவர் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

இப்படி கிளைமாக்ஸ் வரையிலும் பரபரப்பாகவே கொண்டு சென்றுள்ளார் லோகேஷ். ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ் ஆனது ஏன் என்று தெரியவில்லை. அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு சஞ்சய் தத், அர்ஜுன் என்ற இரு வில்லன்கள் இருந்தாலும் வெயிட்டாக தெரியவில்லை. இதுவே படத்திற்கு பெரும் குறையாக இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக எல்சியூ-வை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். அது இறுதி காட்சியில் வெளிப்படையாகவே தெரியும். ஆனால் விஜய்க்கு நெருக்கமான ஒருவரின் கேமியோ இதில் இடம்பெற்று இருப்பது எதிர்பாராதது. அதேபோன்று திரிஷா வரும் காட்சிகளும் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

Leo Movie Review - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம் - Dinamani news - Leo Movie Review, லியோ, லியோ திரை விமர்சனம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ
Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா ? திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இந்தளவு எதிர்பார்ப்பை எந்தத் திரைப்படமும் ஏற்படுத்தியிருக்காது எனும் அளவிற்கு லியோ திரைப்படத்திற்கான விளம்பரங்கள் பெரிய ஆவலை படத்தின் மீது ஏற்படுத்தியிருந்தன. ஒரு பக்கம் இது படத்திற்கு சாதகமாக அமைந்தாலும் அதே அளவு பாதகமான ஒன்றும்கூட. நடிகர் விஜய்க்கு இது வெற்றியா தோல்வியா என்பதைக் காட்டிலும் இயக்குநர் லோகேஷுக்கு இது எந்தளவு கைகொடுத்திருக்கிறது?

லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அதிகம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும், த்ரிஷாவும் இணைகின்றனர், இயக்குநர் லோகேஷின் எல்சியூ வட்டத்தில் லியோ, முன்னணி நடிகர்கள் பட்டாளம் என நாளுக்கு நாள் இப்படத்தின் விளம்பரங்கள் படத்தை மற்ற படங்களிலிருந்து வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு காஃபி ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் பார்த்திபன் எனும் விஜய்க்கு மிஷ்கினின் கும்பலுடன் மோதல் வருகிறது. அதில் பார்த்தியால் அக்கும்பல் கொல்லப்பட அந்த செய்தி மூலம் பார்த்தியை தெலுங்கானாவில் இருக்கும் போதைப் பொருள் உற்பத்தி கும்பலான தாஸ் அண்ட் கோ அறிகின்றனர். பார்த்தியைத் தேடி தாஸ் (சஞ்சய் தத்) கும்பல் இமாச்சல் பிரதேசம் செல்கிறது. எதற்காக தாஸ் கும்பல் பார்த்தியைத் தேடி செல்கிறது? அவர்களுக்கும் பார்த்திக்கும் என்ன சம்பந்தம்? யார் அந்த லியோ? இதுதான் இத்திரைப்படத்தின் கதை.

Leo Movie Review - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம் - Dinamani news - Leo Movie Review, லியோ, லியோ திரை விமர்சனம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ
Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? திரை விமர்சனம்

நடிகர் விஜய்யின் படம் என்பதைத் தாண்டி இது இயக்குநர் லோகேஷின் படம். தனது முந்தையை திரைப்படங்களில் பயன்படுத்திய பல அடையாளக் காட்சிகளை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். பழையப் பாடல்கள், துப்பாக்கிக் காட்சிகள், உணவு, விலங்குகளுக்கான சிறப்புக் காட்சிகள் என படம் விரிகிறது.

நடிகர் விஜய் தனது வழக்கமான உடல்பாவனைகள் இல்லாமல் புதிதாக முயற்சித்திருக்கிறார். படம் முழுக்க விஜய்யை மையமிட்டே சுழல்வதால் அதற்கேற்ப பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்த்தியாக வரும் அவரின் கதாபாத்திரத்தின் தொடக்கத்திற்கும், எழுச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை ரசிகர்களுக்குக் கடத்த மெனக்கெட்டுள்ளார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

லியோவாக அவரின் இளமை ரசிக்கும்படியாக இருக்கிறது. சிறிதுநேரமே வரும் அக்காட்சிகளில் அக்கதாபாத்திரத்திற்கான வித்தியாசத்தை இன்னும்கூட காட்சிப்படுத்தியிருக்கலாம். நடிகர் விஜய் நல்ல ஆக்‌ஷன் மசாலா படமாக வந்திருக்கும் லியோவை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒருபக்கம் விஜய்யை கவனித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாந்தமாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார் சத்யா எனும் த்ரிஷா. கோபக்கார, கண்டிப்பான மனைவியாக ரசிக்க வைக்கிறார். தனது கணவரை சந்தேகப்படும் இடங்களில் த்ரிஷாவின் நடிப்பும், தான் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டதாக உணரும் இடங்களில் நடிகர் விஜய்யின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. இளமை மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறார் த்ரிஷா.

சஞ்சய் தத்தின் நடிப்பு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நடிகர் அர்ஜூன் அந்தக் குறையைப் போக்கிவிட்டார். சாண்டியின் நடிப்பு தனித்துவமாக இருந்தாலும் அதை முதல்பாதிக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டது ஏனோ? இவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பெரிதாக நடிப்பதற்கான இடமோ, திரைக்கதையில் எழுத்தோ இல்லை என்பதால் விட்டுவிடலாம்.

Leo Movie Review - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம் - Dinamani news - Leo Movie Review, லியோ, லியோ திரை விமர்சனம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ
Leo Movie Overview – எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? திரை விமர்சனம்

முன்பே சொன்னதைப் போல லோகேஷ் திரைப்படத்தில் வரும் பழைய பாடல்கள் இந்த முறை சண்டைக்காட்சியுடன் வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக முதல்பாதியில் வரும் “தாமரைப் பூவுக்கும், தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை” பாடல் நன்றாகப் பொருந்திப் போயிருந்தது.

படத்தின் பலம் மக்களுக்கு பரிட்சயமானவர்களைக் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தியது. அதேதான் பலவீனமும். அதிகப்படியான நபர்களை பயன்படுத்தினாலும் அவர்களை எந்தளவு இயக்குநர் பயன்படுத்தினார் என்றால் பெரிய கேள்வியே மிஞ்சுகிறது.

படம் முழுக்க ஆக்‌ஷன் தெறிக்கிறது. ஆனால் வனச்சரகராக கெளதம் மேனன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இமாச்சலத்தின் தியோக் பகுதியே கொலைக்களமாக மாறும்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்விகள் காட்சிக்கு காட்சி விரிகின்றன.

அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன், சாண்டி, மிஷ்கின் என அனைவரையும் கூட்டி வந்து காலி செய்திருக்கிறார் லோகேஷ். எல்சியூ எனும் உலகத்திற்குள் இந்தக் கதையை கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சித்ததாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

விக்ரம் திரைப்படம் கைதி திரைப்படத்துடன் இணைவதற்கு ஒரு லாஜிக்கான காரணம் இருந்தது. ஆனால் அப்படி எந்தக் காரணமும் இல்லாமல் அத்திரைப்படங்களின் சில கதாபாத்திரங்களை மட்டும் லியோவில் உலவவிட்டு இதுவும் எல்சியூ என எப்படி இயக்குநரால் அறிவிக்க முடிகிறது எனப் புரியவில்லை.

வழக்கம்போல அனிருத்தின் இசை படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது. அதேபோல் கேமரா பணிகளும் பாராட்டும்படியே இருந்தன.

Leo Movie Review - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம் - Dinamani news - Leo Movie Review, லியோ, லியோ திரை விமர்சனம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ
Leo Movie Overview எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா – திரை விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் மாதிரி சிகரெட்டை தூக்கிப் போட்டு கமலுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் விஜய்யை லியோ காப்பாற்றினாலும் இயக்குநர் லோகேஷுக்கு இது சற்று சறுக்கல்தான். ஒரு சரக்கிற்கு நன்றாக விளம்பரம் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ். அதற்கு மத்தியில் சரக்கை தரமாகத் தயாரிக்க மறந்து போய்விட்டார்.

இப்படி இரண்டாம் பாதியில் லியோ டல் அடித்திருப்பது இது லோகேஷ் படம் தானா எனவும் கேட்க வைத்துள்ளது. அதனாலேயே ரசிகர்கள் இதை விக்ரம், கைதி அளவுக்கு இல்லை என்ற அதிர்ச்சி விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆக மொத்தம் லியோவின் கர்ஜனை சத்தம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.