Home Tags அனுப்புவதாக

Tag: அனுப்புவதாக

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்தவரிற்கு நேர்ந்த பரிதாபம் – படங்கள் உள்ளே

சீதுவ, தண்டுகம் ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம் மாரவில எடம்பல ஆரச்சிகே சுசன்த ரன்ஜன் ரணசிங்க எனும்35 வயது நபர் என அடையாளம் காணப்படடுள்ளது. சம்பவத்தை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவரது தாயாரான மாராவில,குடாவெவ, லும்பினி மாவத்தையைச் சேர்ந்த ரனசிங்க ஆரச்சிகே சிறியானி என்பவர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையம் வந்து மரணமானவர் தனது மகன் என அடையாளம் காட்டியுள்ளார். திருமணமாகாத இவர் தாயுடன் வாழ்ந்து வந்ததாகவும் மூன்று சகோதரிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மரணமானவர் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மாரவில, மஹவெவ, கட்டான ஆகிய பிரதேசங்களில் சிலரிடம் பணம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பணம் கொடுத்தவர்கள் எவரையும் வெளிநாட்டுக்கு அணுப்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவதால் சுசன்த என்பவர் வீட்டிலிருந்து வேறு வேறு இடங்களில் மாறி மாறி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு முன் மரணமானவர் உறவினரான சஜித் என்பவருடன் வீட்டிலிருந்து சென்றதாகவும் அதன் […]

கனடா அனுப்புவதாக யாழ். பெண்ணிடம் பண மோசடி! – காத்தான்குடி சந்தேகநபரை அள்ளி வந்தது பொலிஸ்!

கனடா அனுப்புவதாகக் கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரை காத்தான்குடியில் இருந்து தூக்கி வந்துள்ளனர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார். இந்த நபரிடம் பளையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஏமாந்துள்ளார். சந்தேகநபரிடன் வங்கிக் கணக்குக்கு 10 லட்சம் ரூபா வைப்பிலிட்ட நிலையில், கனடா அனுப்பாது அந்த நபர் ஏமாற்றியுள்ளார். கனடாவுக்கு அனுப்புவது தொடர்பான பேஸ்புக் விளம்பரம் ஒன்றின் ஊடாகவே சந்தேகநபர் அறிமுகமாகியுள்ளார். அவர் கனடா அனுப்பாது தொடர்ந்தும் ஏமாற்றியதால் பணத்தை வைப்பிலிட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடட குற்ற விசாரணைப் பிரிவினருக்குப் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது. 57 வயதான சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்றும் […]

latest posts