Home Tags கொக்குத்தொடுவாயில்

Tag: கொக்குத்தொடுவாயில்

கொக்குத்தொடுவாயில் வெடிப்புச் சம்பவம் – நால்வர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு கொக்குக்தொடுவாயில் இன்று (ஒக்ரோபர் 20) நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குள்ள வேம்படிச் சந்தியில் வெலிஓயா செல்லும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகியபோதே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் பணிக்குப் பயன்படுத்தும் மின்கலம் ஒன்றே வெடித்துள்ளது என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்! 17 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இதுவரை 17 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என இனங்காணப்பட்ட இடத்தில் கடந்த வாரம் (செப்ரெம்பர் 6) புதன்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து தினமும் அங்கிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டு வந்ததுடன், தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன. துப்பாக்கி ரவைகள், உடைகள், சயனைட் குப்பி, நீர்சுத்திகரிப்புக் கருவி என்பன அங்கிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இன்று (செப்ரெம்பர் 15) ஒன்பதாகவது நாளாக அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் முன்னிலையில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தொல்லியல் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் மாவட்ட சட்ட […]

latest posts