Home Tags முறைப்பாடு!!

Tag: முறைப்பாடு!!

பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடு செய்த இளைஞரிற்கு நேர்ந்த கதி

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் […]

யாழ்.பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் – பொலிஸில் முறைப்பாடு

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில்...

யாழ் மருத்துவபீட மாணவி மாயம்! பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமற்போயுள்ளார். மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் அவரது அலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் வந்துள்ளனர். விடுதியில் பெற்றோர் விசாரித்த போது , மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோனது!! மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பொலிஸில் முறைப்பாடு

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ ஹொன்னந்தர சர்வோதய மாவத்தை பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8 ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மறுநாள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் குழந்தைகள் குறைமாத சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 19ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மற்றைய குழந்தைக்கு தாய் பாலூட்ட சென்ற போது அந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர், கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் […]

குடும்பப் பெண்ணை காணவில்லை – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வசிக்கும் அழகைய்யா சாந்தினி (வயது 28) என்ற பெண்ணை நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் ஒன்றரை வயது குழந்தையின் தாயாவார். தனது குழந்தையின் பிறந்தநாளிற்காக குழந்தைக்கு உடை வாங்கவென அவர் நேற்று காத்தான்குடிக்கு சென்றுள்ளார். எனினும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் குழந்தையின் பிறந்தநாளிற்காக கணவர் அனுப்பிய பணத்தை வங்கியிலிருந்து எடுத்து குழந்தைக்கு உடை வாங்கி வருகிறேன் என தெரிவித்து காத்தான்குடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை முதல் அவர் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இவரை தெரிந்தவர்கள் அல்லது இவரை எங்கேனும் கண்டால் 0761989243 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறும் குழந்தை தாயை கேட்டு ஓயாமல் அழுது கொண்டிருப்பதாகவும் குடும்பj;தினர் தெரிவிக்கின்றனர்.

latest posts